04

E   |   සි   |  

 திகதி: 2023-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0858/2023: Details of Covid-19 deceased burials at Oddamawaddi area

858/2023

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (​i) 2019-2022 காலப்பகுதியில் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட, ஓட்டமாவடியிலுள்ள கொவிட்-19 காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட கொவிட்-19 காரணமாக இறந்த உடல்களின் மொத்த எண்ணிக்கையை வெவ்வேறாகவும்;

(ii) மேலே சொல்லப்பட்ட இறந்த உடல்களின் எண்ணிக்கையை அவற்றின் வயது, பால், இனம், மதம் மற்றும் வதிவிட மாகாணம்/மாவட்டம் ஆகியவற்றுக்கு இணங்க வெவ்வேறாகவும்;

(iii) கொவிட்-19 காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடமாக அரசாங்கம் ஓட்டமாவடியைத் தெரிவுசெய்தமைக்கான அடிப்படையையும்;

(iv) ஓட்டமாவடியைப் போன்று அதே அடிப்படையையும் பிரமாணங்களையும் பயன்படுத்தி அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கொவிட்–19 காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் இடமாக/ இடங்களாக ஓட்டமாவடி தவிர்ந்த வேறு ஏதேனும் இடத்தை/ இடங்களைத் தெரிவு செய்வதற்கு அரசாங்கம் ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டதா என்பதையும்;

அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-07

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks