04

E   |   සි   |  

 திகதி: 2023-08-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0852/2023: மஹிந்த ராஜபக்ஷ தேசிய டெலி-சினிமா பூங்கா: வளங்களைப் பாதுகாத்தல்

852/2023
கெளரவ காமினி வலேபொட,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) ரன்மினிதென்ன, மஹிந்த ராஜபக்ஷ தேசிய டெலி-சினிமா பூங்கா கடந்த அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டதென்பதையும்;
(ii) இப்பூங்கா பயனுள்ள வகையில் பயன்படுத்தப்படாமையினால் தற்போது அங்குள்ள வளங்கள் அழிவடைந்து வருகின்றதென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) மேற்படி டெலி-சினிமா பூங்காவை நிர்மாணிப்பதற்காக முதலீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;
(ii) தற்போது மேற்படி பூங்காவில் படப்பிடிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றனவா என்பதையும்;
(iii) மேற்படி பூங்காவிலுள்ள வளங்களைப் பாதுகாப்பதற்காக நடைமுறையிலுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-23

கேட்டவர்

கௌரவ காமினி வலேபொட, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-10-17

பதில் அளித்தார்

கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks