04

E   |   සි   |  

 திகதி: 2023-03-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0814/2023: முட்டை உற்பத்தி மற்றும் தட்டுப்பாடு: விபரம்

814/2023

கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி,— வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) (i) இலங்கைக்குத் தேவையான முட்டைகளின் எண்ணிக்கையானது அன்றாட மற்றும் வருடாந்த அடிப்படையில் எத்தனை என்பதையும்;

(ii) இன்றளவில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற முட்டைகளின் எண்ணிக்கையானது அன்றாட, மாதாந்த மற்றும் வருடாந்த அடிப்படையில் எத்தனை என்பதையும்;

(iii) இன்றளவில் இலங்கையில் முட்டைக்கான தட்டுப்பாடு நிலவுமாயின், அத்தட்டுப்பாடானது அன்றாட மற்றும் மாதாந்த அடிப்படையில் எத்தனை என்பதையும்;

அவர் வெவ்வேறாக இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) முட்டை உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(ii) அன்றாடம் 1000 இற்கும் மேற்பட்ட, 10,000 இற்கும் மேற்பட்ட மற்றும் 100,000 இற்கும் மேற்பட்ட முட்டைகள் எனும் ஒவ்வொறு தொகுதியின் கீழ் முட்டைகளை உற்பத்தி செய்கின்ற உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(iii) மேற்படி (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு தொகுதியின் கீழ் நாளொன்றில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

அவர் வெவ்வேறாக இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) முட்டை ஒன்றினை இறக்குமதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் செலவு எவ்வளவு என்பதையும்;

(ii) அவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டையொன்றினை நுகர்வோருக்கு வழங்கக் கூடிய விலை எவ்வளவு என்பதையும்;

(iii) முட்டை உள்ளிட்ட சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் ஏமாற்று வியாபாரிகளால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-07

கேட்டவர்

கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-08-08

பதில் அளித்தார்

கௌரவ நலின் பிரனாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks