பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2100/ ’11
கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2009 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களுக்காக துறைமுகத்திற்குச் செலுத்தப்பட்ட தாமதக் கட்டணத் தொகை மற்றும் செலுத்தப்பட்ட தரப்பு யாதென்பதையும்;
(ii) 2006, 2007, 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மேற்படி இறக்குமதிகளுடன் தொடர்புடையதாக அரச மருந்தகக் கூட்டுத்தானம் செலுத்தியுள்ள தாமதக் கட்டணங்கள் தனித்தனியாக யாவையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) 2008 ஆம் ஆண்டு இனங்காணப்பட்ட பழுதடைந்த , காலாவதியான மற்றும் தரத்தில் குறைந்த மருந்துகளின் பெறுமதி எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி தரத்தில் குறைந்த மருந்து வழங்குநர்களிடமிருந்து அறவிடப்படவேண்டியுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி பணத் தொகை அறவிடப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;
(iv) 2008 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள் தரத்தில் குறைந்தவையென வெளிப்படுத்தப்பட்ட போதிலும் கேள்விப்பத்திரச் சபையானது மீளக் கொள்வனவு செய்கின்றபோது இதனைக் கவனத்திற்கொள்ளாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) சபியுரொக்ஷிம் சோடியம் (Cefuroxime Sodium) 750 மில்லிகிராம் 250,000 அலகு தடுப்பூசி மருந்துகள், 2009 ஆம் ஆண்டு ஆய்வுகூட பரிசோதனையின்றி கொள்வனவு செய்யப்பட்ட கட்டுத்துணி மற்றும் உரிய நிறையின்றி அமொக்சிலின் நுண்ணுயிர்கொல்லி வில்லைகள் 250 மில்லிகிராம் 6783 அலகுகள் ஆகியவற்றை மருந்தகக் கூட்டுத்தானம் கொள்வனவு செய்த வேளையில் ஏற்பட்ட நட்டம் யாதென்பதை தனித்தனியாக அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-04-03
கேட்டவர்
கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.
அமைச்சு
சுகாதர
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks