04

E   |   සි   |  

 திகதி: 2023-05-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0690/2023: மட்டக்களப்பு, துறைநீலாவணை வைத்தியசாலையிலுள்ள வசதிகள்: விபரம்

690/2023

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவின் துறைநீலாவணை பிரதேசத்தில் காணப்படுகின்ற கிராமிய வைத்தியசாலை இன்றளவில் பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) மேற்படி வைத்தியசாலைக்காக இரண்டு மருத்துவர்களை நியமிக்க வேண்டியபோதிலும், இன்றளவில் ஒரு வைத்தியர் மட்டுமே நியமிக்கப் பட்டுள்ளார் என்பதையும்;

(iii) அந்த மருத்துவருக்கு வேறொரு வைத்தியசாலையிலும் பணிகளை கவனிக்க வேண்டியிருப்பதால், குறித்த பிரதேசத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;

(iv) ஆரம்ப காலத்தில் இந்த மருத்துவமனையில் நோயாளர் காவு வண்டியொன்று இருந்தபோதிலும் தற்போது நோயாளர் காவு வண்டியொன்று இல்லை என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) மேற்படி வைத்தியசாலைக்காக இதுவரை நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்காததன் காரணம் யாது என்பதையும்;

(ii) அந்த வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி ஒன்றை வழங்காமைக்கான காரணம் யாது என்பதையும்;

(iii) மேற்படி வைத்தியசாலைக்காக நிரந்தர மருத்துவர் ஒருவரை நியமிக்கவும், நோயாளர் காவு வண்டி ஒன்றை வழங்கவும் எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-25

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-11-08

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks