01

E   |   සි   |  

 திகதி: 2023-05-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

0689/2023: மட்டக்களப்பு, களுதாவளை பிரதேச வைத்தியசாலை: குறைபாடுகள்

689/2023

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள களுதாவளை பிரதேச வைத்தியசாலைக்கு நிரந்தர மருத்துவரொருவர் நியமிக்கப்படவில்லை என்பதையும்;

(ii) அக் காரணத்தினால் பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) (i) மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு நிரந்தர மருத்துவரொருவர் இதுவரை நியமிக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி வைத்தியசாலைக்கு மருந்தாளரொருவர் நியமிக்கப்படாமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்குறிப்பிட்ட வைத்தியசாலையில் இன்றளவில் நிலவுகின்ற வெற்றிடங்கள் எப்போது நிரப்பப்படும் என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து இதுவரை இவ்வைத்தியசாலையில் எவ்வித புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(iii) மேற்குறிப்பிட்ட வைத்தியசாலையை புனரமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-11

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2023-08-08

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks