01

E   |   සි   |  

 திகதி: 2023-03-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0685/2023: Issues in water supply in Batticaloa

685/2023

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நீர்த்தாங்கியின் நிர்மாணப் பணிகள் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு பணம் செலுத்தாமை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பதையும்;

(ii) அதன் காரணமாக தமன பிரதேசத்திலிருந்து நேரடியாகவே நீர் வழங்கப்படுகின்றது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) ஆமெனில், தமன பிரதேசத்தில் இருந்து பிரதான நான்கு பிரிவுகளுக்கு நீர் வழங்கப்படுவதன் காரணமாக ஏற்பட்டுள்ள சிரமங்கள் யாவை என்பதையும்;

(ii) தற்போது நீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் நீர் வழங்குவதற்காக நீர்க்குழாய்கள் பொருத்த வேண்டியுள்ள கிராமங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

(iii) மேற்படி கிராமங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-09

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks