logo

03

E   |   සි   |  

 திகதி: 2012-02-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1912/2012: Real Estate Exchange (Private) Limited

1912/ ’11

 

கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்  அமைச்சவரைக் கேட்பதற்கு,—

(அ)  கொழும்பில் சேரிப்புறங்களில் வாழ்கின்ற மக்களது குடியிருப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ரியல் எஸ்டேட் எக்ஸ்சேன்ஜ் (பிரைவேட்) லிமிடெட் (REEL) ஆனது நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA), ஸ்ரீ லங்கா வீதி அபிவிருத்திக் கம்பனி (SLRDC), தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை (NHDA), கொழும்பு மாநகர சபை (CMC) ஸ்திரமான நகராட்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றுடன் கூட்டிணைக்கப்பட்டது என்பதை அவர் அறிவாரா?

(ஆ)2006 முதல் இற்றை வரையில்,

(i) ‘ரீல்’ (REEL) இனது பணிப்பாளர்கள், தவிசாளர்கள், பிரதான கணக்கீட்டு அதிகாரிகள் யார் என்பதையும்;

(ii) திறைசேரி, அரச வங்கிகள், அல்லது அரச நிறுவனங்கள் ஆகியவற்றினால் ‘ரீல்’ இற்கு மாற்றம் செய்யப்பட்ட பணம் தொடர்பான விபரங்களையும்;

(iii) ஒவ்வொரு மாற்றத்தின் நோக்கம் எதிர்வு கூறப்பட்ட விளைவுகள், உண்மையில் கிடைத்த விளைவுகள் ஆகியனவற்றையும்;

(iv) ரூ. 5 மில்லியனுக்கு மேற்பட்ட செலவினங்கள் பற்றிய விபரங்கள் மற்றும் ஒவ்வொன்றையும் அங்கீகரித்தமைக்கான நோக்கம் ஆகியவற்றையும்

(v) ‘ரீல்’ (REEL) இன் தற்போதைய நிதி நிலைமை என்னவென்பதையும்

அவர் கூறுவாரா?

(இ) (i) 2010 சனவரி முதல் இற்றை வரை ‘ரீல்’ தொடர்பான ஏதாவது வீண்செலவுகள், மோசடிகள், மற்றும் அல்லது ஊழல்கள் பற்றிய ஏதாவது உள்ளக விசாரணைகள், கணக்காய்வுகள், அல்லது குற்றவியல் புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பதையும்;  

(ii) ஆம் எனில் அவற்றின் விளைவுகளையும்;

(iii) மேற்படி (இ) (i) இல் கண்டறியப்பட்ட முறைகேடுகள் தொடர்பில் பிரேரிக்கப்பட்ட பரிகார நடவடிக்கைகளையும் அவை மேற்கொள்ளப்பட்ட திகதிகளையும்

அவர் கூறுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-02-09

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks