பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1900/ ’11
கௌரவ ஜோன் அமரதுங்க,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) நூலகர் சேவை, மொழிபெயர்ப்பாளர் சேவை, சாரதி சேவை ஆகிய சேவைகள் தொடர்பாக செயலாற்றுவதற்கு நியமிக்கப்பட்டிருந்த இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளர் 2010.11.30 ஆம் திகதி தொடக்கம் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் என்பதுடன், இதுவரை மேற்படி பதவிக்கு ஒருவரும் நியமிக்கப்படாமையின் காரணமாக மேற்படி சேவைகளுக்கான ஆட்சேர்ப்புகள், பதவி உயர்வுகள், இடமாற்றம், சேவைப் பிரமாணக் குறிப்புகளை தயார் செய்தல் மற்றும் திருத்தியமைத்தில் ஆகிய நடவடிக்கைகள் தாமதமடைவதையும், சில சேவைகளின் நடவடிக்கைகள் தடைப்பட்டிருப்பதையும் அவர் அறிவாரா?
(ஆ) (i) இணைந்த சேவைகள் உதவிப் பணிப்பாளரின் வெற்றிடமான பதவிக்கு தற்போது எவரேனும் நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலர் யார் என்பதையும்;
(iii) மேற்படி நியமனம் மேற்கொள்ளப்பட்ட திகதி யாது என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) மேற்படி பதவிக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லையாயின் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், அத்திகதி யாது என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-02-08
கேட்டவர்
கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks