04

E   |   සි   |  

 திகதி: 2012-11-16   பதிலளிக்கப்பட்டவைகள் 

1895/2012: யாய காமினி கனிஷ்ட வித்தியாலயம்: காணி மற்றும் கட்டிடங்கள்

1895/ ’11

கெளரவ புத்திக பதிரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய கல்வி வலயத்திற்குரியதாயிருந்த யாய காமினீ கனிஷ்ட வித்தியாலயம் மூடப்பட்டு பல வருடங்கள் ஆகின்றனவென்பதையும்;

(ii) இந்த வித்தியாலயத்திற்குச் சொந்தமாகவிருந்த சில கட்டிடங்கள் தற்போது அழிவுற்று வருகின்றனவென்பதையும்;

(iii) இந்த வித்தியாலயத்திற்குச் சொந்தமாக சுமார் ஏழு ஏக்கர் நிலப்பரப்பு உள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) யாய காமினீ கனிஷ்ட வித்தியாலயத்திற்குச் சொந்தமாகவுள்ள கட்டிடங்கள் மற்றும் நிலப்பரப்பு என்பவற்றை அழிவுற இடமளிப்பது பெரும் தவறாகும் என்பதையும்;

(ii) மேற்படி வித்தியாலயத்திற்குச் சொந்தமான வளங்களைப் பயன்படுத்தி கைத்தொழிற்சாலையொன்றை ஆரம்பித்து பிரதேசவாழ் மக்களின் தொழில் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியுமென்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) (i) ஆமெனில், மேற்படி பாடசாலையின் வளங்களை மேலே முன்மொழியப்பட்டவாறு பயன்படுத்துவதற்கு திட்டமிடுவாரா என்பதையும்;

(ii) இன்றேல், பயனுள்ள வேறு நடவடிக்கைக்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்த நடவடிக்கை யாதென்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-16

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-12

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks