02

E   |   සි   |  

 திகதி: 2012-01-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

1805/2012: Airforce Helicopters - Helicoptes used by VIP

1805/ ’11

 

கெளரவ அகில விராஜ் காரியவசம்,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமாவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துவதற்கான சிறப்புரிமையைக் கொண்டுள்ள முக்கியஸ்தர்கள் யாவர் என்பதையும்;

(ii) இந்த முக்கியஸ்தர்கள் விமானப் படையின் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் யாவையென்பதையும்;

(iii) கடந்த மூன்று வருட காலப்பகுதியில் ஒவ்வொரு வருடத்திலும் விமானப் படையின் ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்திய  முக்கியஸ்தர்கள் தனித்தனியாக யாவர் என்பதையும்;

(iv) மேற்படி ஒவ்வொரு முக்கியஸ்தரும் ஹெலிகொப்டர்களின் மூலம் பயணஞ் செய்த தடவைகளின் எண்ணிக்கை வருட ரீதியில் எத்தனையென்பதையும்;

(v) மேற்படி விமானப் பயணத்திற்காக இலங்கை விமானப்படைக்குச் செலவான மொத்தப் பணத் தொகை வருட ரீதியில் தனித்தனியாக எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-01-18

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks