பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2012-02-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1803/2012: Roads - Circular Road - Gamunupura

1803/ ’11

 

கௌரவ ஆர். எம். ரஞ்ஜித் மத்தும பண்டார,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      தனமல்வில பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தின், செவனகல பிரதேச செயலாளர் பிரிவில், இந்திகொலபெலெஸ்ஸ கிராம உத்தியோகத்தர் பிரிவின் கெமுனுபுர சுற்றுவட்ட வீதி “கெமுனு விவசாய அமைப்பினால்” மறுசீரமைக்கப்பட்டது என்பதையும்;

(ii) இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து மேற்படி விவசாய அமைப்பு கைச்சாத்திட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய 419 ஆம் இலக்க கொடுப்பனவு உறுதிச் சீட்டின் மூலம், நிறைவேற்றப்பட்ட வேலைகளுக்காக ரூ. 801,089.99 பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதையும்;

(iii) மேற்படி வீதியிலேயே 665 மீற்றர், இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபையின் உடன்படிக்கையின் கீழான வேலைகளுக்கென கெமுனு விவசாய அமைப்பினால் தனமல்வில பிரதேச சபையிடமிருந்து ரூ. 588,858.25 பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதையும்;

(iv) கணக்காய்வாளர் தலைமை அதிபதித் திணைக்களத்தினால் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பரிசீலனைகளுக்கு அமைய ஒரே பணிக்காக இரு நிறுவனங்களிடமிருந்து “கெமுனு விவசாய அமைப்பு” என்ற பெயரில் மோசடியான விதத்தில் நிதி பெறப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி மோசடி நடவடிக்கைக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஆட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-02-08

கேட்டவர்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks