logo

03

E   |   සි   |  

 திகதி: 2012-02-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

1714/2012: Retirement Proposal - SL Port Authority

1714/ ’11

 

கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கை துறைமுக அதிகார சபையின் பணியாளர்களை ஓய்வுபெறச்செய்யும் திட்டமொன்று துறைமுக அதிகார சபையின் 03/2011 ஆம் இலக்க சுற்றறிக்கையின் கீழ் வெளியிடப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) மேற்படி சுற்றறிக்கையின் பிரகாரம் இலங்கை துறைமுக அதிகார சபையில் குறைந்தபட்சம் பத்தாண்டு கால சேவையைப் பூர்த்திசெய்துள்ளதும், எதிர்காலத்தில் ஐந்தாண்டு காலம் சேவையாற்றவிருக்கின்றதுமான பணியாளர்களுக்கு இருபது இலட்சம் ரூபா உச்சவரம்பின் கீழ் ஏற்புடைய இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியும் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இலங்கை துறைமுக அதிகார சபையினால் கொழும்புத் துறைமுகத்தின் விஸ்தரிப்பு, அம்பாந்தோட்டை புதிய துறைமுக நிர்மாணிப்பு மற்றும் ஏனைய துறைமுகங்களை விருத்திசெய்யும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் துறைமுக அதிகார சபையின் பணியாளர்களை ஓய்வுபெறச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதன் அடிப்படை யாதென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) கடந்த காலத்தில் அரசியல் நிர்ப்பந்தங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட அத்தியாவசியமல்லாத ஆட்சேர்ப்புகள் காரணமாக துறைமுக அதிகார சபையில் ஊழியர் மிகை ஏற்பட்டுள்ளதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2012-02-08

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks