04

E   |   සි   |  

 திகதி: 2011-12-01   பதிலளிக்கப்பட்டவைகள் 

1612/2011: Municipal Council - Jaffna

1612/ ’11

 

கெளரவ ஈ.சரவணபவன்,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      யாழ்ப்பாண மாநகர சபையின் நகரபிதா, சபையின் அனுமதியின்றி தான்தோன்றித்தனமான முடிவுகளை எடுத்து, யாழ்ப்பாண நகரின்   சதுப்பு நிலப் பகுதியொன்றில், நான்கு மாடிகளைக் கொண்ட வர்த்தகக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு தனியார் வர்த்தகரொருவருக்கு அனுமதி  வழங்கியுள்ளார் என்பதையும்;

(ii) யாழ்ப்பாணத்தின் முன்னாள் நகரபிதாவான காலஞ்சென்ற திரு. ரவிராஜ், மேற்படி சதுப்பு நிலப் பகுதியில் மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக முன்வைத்த பிரேரணையை, மண் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு அறிக்கையின் விதப்புரைகள் காரணமாக செயற்படுத்தவில்லை என்பதையும்;

(iii) எந்தவிதமான மண் பரிசோதனையும் மேற்கொள்ளப்படாது, மேற்படி சதுப்பு நிலத்தில், தற்போது நான்கு மாடிக் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்படுகின்றது என்பதையும்;

(iv) மேற்படி நிர்மாணிப்பு, பிற்காலத்தில்  உயிர் மற்றும் சொத்திழப்புகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமையலாம் என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் முன்னதாக, இதை நிர்மாணிப்பவர் சில வர்த்தக நிலையங்களை விற்பனை செய்துள்ளார் என்பதையும்;

(ii) இதில், ரூபா 19,000,000 க்கு விற்பனை செய்யப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு ரூபா 11,000,000க்கு மாத்திரம் உறுதிகளை எழுதி, முற்பணமாக ரூ. 50,000 வீதம் பெறப்பட்டுள்ளது என்பதையும்;

(iii) இதன்மூலம், மாநகர சபைக்கு வருமான இழப்பும் வருமான வரி மோசடியும் நடைபெற்றுள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(இ) மேற்கூறப்பட்ட நிலைமையைத் தடுப்பதற்காக ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-12-01

கேட்டவர்

கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks