பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1554/ ’11
கெளரவ ரவி கருணாநாயக்க,— கலாசார, கலை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) விகாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீன கலாசார நிலையம், கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராகப் பதவி வகித்த 2002- 2004 வரையான காலப்பகுதியில் சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்குக் கிடைத்த ஒரு நன்கொடையா என்பதையும்;
(ii) அது ஒரு பூரணமான நன்கொடையா என்பதையும்
அவர் கூறுவாரா?
(ஆ) (i) சீன கலாசார நிலைய நிர்மாணத்தின் ஆரம்பத் திகதி மற்றும் முடிவுத் திகதி ஆகியவற்றையும்;
(ii) மேற்படி கருத்திட்டம் தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட மொத்தச் செலவு மற்றும் அது முடிவுறும் வேளையில் இறுதிச்செலவு ஆகியவற்றையும்;
(iii) ஊழியத்துக்காகச் செலவுசெய்யப்பட்ட செலவினத்தையும்
அவர் கூறுவாரா?
(இ) (i) இக்கருத்திட்டத்தில் வேலைக்கமர்த்தப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெவ்வேறாகவும்;
(ii) மேற்படி கருத்திட்டத்துக்காக கம்பனி அல்லது நாடு ஒன்றினால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட பதவிப்பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) சீன கலாசார நிலைய நிர்மாணக் கருத்திட்டத்தின் தொழிலாளர்கள் சார்பாகச் செலுத்தப்பட்ட ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதி ஆகியவற்றின் பெறுமதிகளையும்
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-04-18
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
கலாசார, கலை அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ටී. බී. ඒකනායක මහතා (සංස්කෘතික හා කලා කටයුතු අමාත්යතුමා)
(மாண்புமிகு ரி. பி. ஏக்கநாயக்க - கலாசார, கலை அலுவல்கள் அமைச்சர்)
(The Hon. T.B. Ekanayake - Minister of Culture and the Arts)
ගරු කථානායකතුමනි, මෙතුමා අසා තිබෙන්නේ විහාරමහා දේවී උද්යානය අසල ඉදි කර අති චීන සංස්කෘතික මධ්යස්ථානයක් සම්බන්ධයෙනුයි. එහෙම මධ්යස්ථානයක් විහාරමහා දේවී උද්යානය අසල නැහැ.
කථානායකතුමා
(சபாநாயகர் அவர்கள்)
(Mr. Speaker)
එහෙම නම් එච්චරයි. එහෙමද?
ගරු ටී. බී. ඒකනායක මහතා
(மாண்புமிகு ரி. பி. ஏக்கநாயக்க)
(The Hon. T.B. Ekanayake)
මා හිතන්නේ එසේයි. එතුමා අසා තිබෙන්නේ චීන සංස්කෘතික මධ්යස්ථානයක් ගැනයි. එහෙම එකක් නැහැ.
பதில் தேதி
2013-03-07
பதில் அளித்தார்
கௌரவ ரீ.பீ. ஏக்கநாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks