பார்க்க

02

E   |   සි   |  

 திகதி: 2011-12-14   பதிலளிக்கப்பட்டவைகள் 

1370/2011: திரு. எஸ்.ரீ.கே. ஜயவீர சகோதரர்களின் காணி : நட்டஈடு

1370/ ’11

 

கெளரவ புத்திக பத்திரண,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      வெலிகம பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தின் வெலிகம, கப்பரதொட்ட,“தர்ஷன” வில் வதியும் திரு. எஸ்.ரீ.கே. ஜயவீர உள்ளிட்ட சகோதரர்களுக்கு சொந்தமான வெலிகம, கப்பரதொட்ட புதிய காலி வீதியில் 153/1 இலக்கமுடைய தனிகஹவத்த எனும் காணியில் சுமார் 18.235 பர்சஸ் காணித் துண்டொன்று வெலிகம நகர சபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதென்பதையும்;

(ii) மேற்படி சுவீகரிப்பு இடம்பெற்று அண்ணளவாக ஒரு வருடகாலம் கடந்திருந்தாலும் இற்றைவரை நட்டஈடு வழங்கப்படவில்லை என்பதையும்;

(iii) வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலமாக சுவீகரிக்கப்பட்ட மேற்படி காணிக்கு மேலதிகமாக திரு. எஸ்.ரீ.கே. ஜயவீர உள்ளிட்ட சகோதரர்களுக்கு சொந்தமான அண்மித்துள்ள காணிகளையும் உள்ளடக்குகின்ற வகையில் வெலிகம நகர சபையினால் தற்போது கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) சுவீகரிக்கப்பட்ட காணிக்கு இற்றவைரை நட்டஈடு வழங்கப்படாமைக்கான காரணம் யாதென்பதையும்;

(ii) நட்டஈடு செலுத்தப்படுமாயின் அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென்பதையும்;

(iii) நட்டஈடாக எவ்வளவு பணம் செலுத்தப்படும் என்பதையும்

அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

(இ) (i) மேற்படி (அ) (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள கட்டிடங்களை அமைப்பதற்காகப் பயன்படுத்திய காணிக்கும் நட்டஈடு பெற்றுகொடுக்கப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், இந் நட்ட ஈட்டுத் தொகை எவ்வளவென்பதையும்

அவர் இ்ச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-12-14

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු ඉන්දික බණ්ඩාරනායක මහතා (පළාත් පාලන හා පළාත් සභා නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு இந்திக பண்டாரநாயக்க - உள்ளூராட்சி, மாகாண சபைகள் பிரதி அமைச்சர்)

(The Hon. Indika Bandaranayake - Deputy Minister of Local Government and Provincial Councils)

ගරු කථානායකතුමනි, පළාත් පාලන හා පළාත් සභා අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

(අ)          (i)      නැත. එවැනි පවරා ගැනීමක් ගැන තහවුරු වී ‍නොමැත.

              (ii)      අදාළ නොවේ.

             (iii)      එවැනි ගොඩනැඟිල්ලක් ඉදි කර නොමැත.

(ආ) (i) අදාළ නොවේ.

(ii) අදාළ නොවේ.

(iii) අදාළ නොවේ.

(ඇ) (i) අදාළ නොවේ.

(ii) අදාළ නොවේ.

(ඈ) පැන නොනඟී.

 

 

பதில் தேதி

2012-11-09

பதில் அளித்தார்

கௌரவ இந்திக்க பண்டாரநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks