04

E   |   සි   |  

 திகதி: 2011-06-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1172/2011: Housing construction under the Project Api Wenuwen Api

1172/ ’11

கெளரவ திஸ்ஸ அத்தநாயக்க,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      ‘அபி வெனுவென் அபி’ (நமக்காக நாம்) இராணுவ வீரர்களுக்கான நிதியத்தின் அதிகாரிகளினால் அத்திட்டத்தின் கீழ் பணம் சேகரித்து, இராணுவ வீரர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஊடகங்கள் மூலம் நாட்டுக்கு அறிவிக்கப்பட்டது என்பதையும்;

(ii) அதற்கமைய, மேற்படி நிதியத்துக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள், இரணுவ வீரர்களுக்காக பாரிய நிதித் தொகையினை நன்கொடையாக அளித்துள்ளனர் என்பதையும்;

(iii) மேற்படி வேலைத்திட்டத்தின் கீ்ழ் இபலோகம ரணஜயபுரவில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தின் மூலம் வீடுகளை வழங்குகையில், இராணுவ வீரர்களிடமிருந்து பணம் அறவிடப்பட்டது என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) இராணுவ வீரர்களுக்கு இலவசமாக வீடுகளை அமைத்துத் தருவதாகக் கூறி, பணத்துக்கு வீடுகளை வழங்குவதும்;

(ii) பணம் வழங்குவதற்கு விரும்பாத இராணுவ வீரர்களை அந்த வீடுகளிலிருந்து அகற்றுவதும்

நியாயமற்றது என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-06-22

கேட்டவர்

கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks