02

E   |   සි   |  

 திகதி: 2011-05-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

1097/2011: Recruitment of Graduates Teachers in Sothern Province

1097/ ’11

 கெளரவ அகில விராஜ் காரியவசம்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு  ஆட்சேர்ப்புச் செய்வதற்காக தென் மாகாண சபையினால் 2007ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்,

(ii) ஆமெனில், மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்ட திகதி யாதென்பதையும்,

(iii) மேற்படி பரீட்சையின் பெறுபேறுகளின் பிரகாரம் ஒவ்வொரு பட்டதாரியினாலும் பெறப்பட்டுள்ள புள்ளிகள் தனித்தனியாக எத்தனையென்பதையும்,

(iv) மேற்படி பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுள்ளோரின் பெயர்கள் மற்றும் அவர்கள் பெற்றுள்ள புள்ளிகள் யாவையென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேற்படி பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக உத்தேசிக்கப்பட்டிருந்த நிபந்தனைகள் யாவையென்பதையும்,

(ii) நியமனங்களை வழங்கும்போது முன்னர் உத்தேசிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்,

(iii) ஆமெனில், மேற்படி மாற்றத்தின் காரணமாக மேற்படி பரீட்சையில் மேல்மட்ட பெறுபேறுகளைப் பெற்ற பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-05-03

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks