பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1357/2020
கௌரவ அநுர திசாநாயக்க,— பிரதம அமைச்சரும் நிதி அமைச்சரும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2020 டிசம்பர் 31 ஆம் திகதியளவில் "செய்கடமை கொவிட்- 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தில்" சேர்ந்துள்ள மொத்தத் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி நிதியத்திலிருந்து செலவிடப்பட்டுள்ள தொகையானது ஒவ்வொரு தலைப்பிற்கு ஏற்ப தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(iii) இந்நிதியம் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் பிரச்சாரப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவென்பதையும்;
(iv) கொவிட்-19 தொற்றுநோய் தொடர்பாக மக்களை விழிப்புணர்வூட்டும் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்ட நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(v) மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு நிறுவனத்திற்கும் "செய்கடமை கொவிட்- 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திலிருந்து" செலுத்தப்பட்டுள்ள தொகை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-02-23
கேட்டவர்
கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(அ) (i) ரூ. 1,722,318,085.85 (ஒரு பில்லியன் எழுநூற்று இருப்பத்திரண்டு மில்லியன் முந்நூற்று பதினெட் டாயிரத்து எண்பத்தைந்து ரூபாய் எண்பத்தைந்து சதம்)
(ii)
|
விபரம் |
குழுவின் அனுமதியுடன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை (ரூ.மில்லியன்) |
உண்மையான செலவு (ரூ.) |
|
PCR பரிசோதனைகளுக்காக |
100 |
42,605,812.00 |
|
விழிப்புணர்வு (Advocacy) வேலைத்திட்டங்களுக்காக |
100 |
24,364,800.00 |
|
தனிமைப்படுத்தல் நிலைய வசதிகளுக்காக |
86.5 |
38,031,065.00 |
|
மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையின் கொவிட் - 19 இரசாயனகூட வசதிகளுக்காக |
112.14 |
இறுதியான உறுதிப் படுத்தல் கிடைக்கப் பெறவுள்ளது. |
|
இலங்கை நனோ தொழில்நுட்ப நிறுவனத்தினூடான Rapid Test Kit மேம்படுத்தல் செயற்றிட்டத்திற்காக |
3.5 |
இறுதியான உறுதிப் படுத்தல் கிடைக்கப் பெறவுள்ளது. |
|
10 அம்பியுலன்ஸ் வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்காக |
150 |
இறுதியான உறுதிப் படுத்தல் கிடைக்கப் பெறவுள்ளது |
(iii) · நிதியத்தின் மேம்பாட்டுக்காக எவ்வித தொகையும் செலவிடப்படவில்லை.
· கொவிட் - 19 நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுதல் தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக ரூ.24,364,800.00 (இருபத்து நான்கு மில்லியன் முந்நூற்று அறுபத்து நான்காயிரத்து எண்ணூறு ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது.
(iv) சுகாதார அமைச்சு.
(v) ரூ.24,364,800.00 (இருபத்து நான்கு மில்லியன் முந்நூற்று அறுபத்து நான்காயிரத்து எண்ணூறு ரூபாய்) சுகாதார அமைச்சுக்குச் செலுத்தப் பட்டுள்ளது.
(ஆ) பொருத்தமற்றது.
பதில் தேதி
2021-02-23
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks