logo

03

E   |   සි   |  

 திகதி: 2011-04-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

1007/2011: Acting Principals

1007/ ’10

கெளரவ அகில விராஜ் காரியசவம்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      அரசாங்க பாடசாலை முறைமையில் உள்ள பதில் அதிபர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

           (ii)    பதில் அதிபர்கள் உள்ள பாடசாலைகளில், அதிபர்களாக கடமையாற்றுவதற்கான தகைமைகளைக் கொண்ட கல்வி நிர்வாக சேவையில் சித்தியடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

(iii) அதற்கு மேலதிகமாக, மேற்படி பாடசாலைகளில் அதிபர் பதவிகளை வகிப்பதற்கு தகைமையுள்ள அதிபர் தரங்களில் சித்தியடைந்துள்ள அதிபர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

(iv) மேற்படி அதிபர்கள் குறி்த பதவிகளுக்கு நியமனம் செய்யப்படாமைக்கான காரணங்கள் எவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) நாட்டிலுள்ள இசுறு பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

(ii) நவோதய பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

(iii) மேற்படி பாடசாலைகளுக்கு கடந்த 5 வருடங்களில் ஒதுக்கப்பட்ட நிதித்தொகை தனித்தனியே எவ்வளவு என்பதையும்,

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) வடமேல் மாகாண சபையின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற பாடசாலைகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள பணியாள் தொகுதி, ஒவ்வொரு பதவிக்கும் அமைய தனித்தனியே யாதென்பதையும்,

(ii) அவ்வாறு ஊழியர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட பாடசாலைகள் எவை என்பதையும்,

(iii) ஊழியர்கள் ஆட்சேர்ப்புச் செய்யும் நடைமுறை எது என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?


 

கேட்கப்பட்ட திகதி

2011-04-05

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks