01

E   |   සි   |  

 திகதி: 2021-09-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

0778/2021: Granting Lands for resettlement purposes in Mannar

778/2020

கெளரவ கே. காதர் மஸ்தான்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலகப் பிரிவின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக அகத்திமுறிப்பு அளக்கட்டு கிராமத்தில் அமைந்துள்ள காணி ஒதுக்கப்பட்டு அதற்கான காணி உரிமங்கள் அப்போதைய பிரதம அமைச்சரினால் ஏற்புடைய குடும்பங்களுக்கு 2014.10.12 ஆம் திகதியன்று கிளிநொச்சியில் வைத்து வழங்கப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) காணி ஆணையாளர் நாயகத்தின் 2013.07.02 ஆம் திகதிய என்பி/28/04/03/169 ஆம் இலக்க கடிதத்தின் பிரகாரம், தயாரிக்கப்பட்ட உரிமங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி உரிமப்பத்திரதாரிகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) இவர்களுள் இன்றளவில் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்குறிப்பிட்ட (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள உரிமப்பத்திரதாரிகளுள் ஏற்கனவே காணிகள் கிடைத்துள்ள உரிமப்பத்திரதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(v) இதுவரை காணிகள் கிடைக்காத உரிமப்பத்திரதாரிகளுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ள திகதி யாதென்பதையும்;

(vi) காணி உரிமங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படக் காரணம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-09-22

கேட்டவர்

கௌரவ கே.காதர் மஸ்தான், பா.உ.

அமைச்சு

காணி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-11-15

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks