E   |   සි   |  

 திகதி: 2021-01-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0762/2021: பதுளை மாவட்டத்திலுள்ள தோட்ட வைத்தியசாலைகள்: அபிவிருத்தி

762/2020

கௌரவ வடிவேல் சுரேஷ்,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள பெருந்தோட்ட வைத்தியசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அவற்றில் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ள பெருந்தோட்ட வைத்தியசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) தற்போது தொழிற்படும் நிலையிலுள்ள பெருந்தோட்ட வைத்தியசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) தற்போது தொழிற்படாத நிலையிலுள்ள பெருந்தோட்ட வைத்தியசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) ஏற்கனவே அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு மருத்துவர்கள், ஏனைய பணியாட்டொகுதி உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) மேற்படி பெருந்தோட்ட வைத்தியசாலைகளுக்கு பிணியாளி வண்டிகளை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) தற்போது தொழிற்படும் நிலையிலுள்ள மற்றும் தொழிற்படாத நிலையிலுள்ள பெருந்தோட்ட வைத்தியசாலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(ii) அனைத்து பெருந்தோட்ட வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்தல் குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-07

கேட்டவர்

கௌரவ வடிவேல் சுரேஷ், பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-01-07

பதில் அளித்தார்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks