01

E   |   සි   |  

 திகதி: 2021-01-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

0553/2021: Road types in Kurunegala District

553/2020

கௌரவ அஸோக அபேசிங்ஹ,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) குருணாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய வீதிகள், மாகாண வீதிகள் மற்றும் கிராமிய வீதிகளின் நீளம் பிரதேச செயலகப் பிரிவுகளின் அடிப்படையில் தனித்தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி வீதிகளில்,—

(i) காபட் இடப்பட்ட வீதிகளின் நீளம்;

(ii) தார் இடப்பட்ட வீதிகளின் நீளம்;

(iii) காபட் அல்லது தார் இடப்படாத வீதிகளின் நீளம்;

எவ்வளவு என்பதை தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) மேற்படி (அ) இல் குறிப்பிட்ட கிராமிய வீதிகளின் நீளம் தனித்தனியாக உள்ளூராட்சி மன்றங்களின் அடிப்படையில் எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி கிராமிய வீதிகளைப் புனரமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-07

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks