01

E   |   සි   |  

 திகதி: 2020-11-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0519/2020: Development of Valaichchenai fishing harbour

519/2020

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— கடற்றொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) வாழைச்சேனையில் அமைந்துள்ள கடற்றொழில் துறைமுகத்தில் சாதாரண இழுவைப் படகுகளை கையாளுவதற்கான வசதிகள் உள்ள போதும் அதன் நுழைவாயில் மற்றும் ஆழம் போதுமானதாக இல்லாததால் மிகப் பெரிய இழுவைப் படகுகளை கையாளுதல் பிரச்சினையான விடயமொன்றாகி உள்ளதோடு, இதன் காரணமாக உள்நாட்டு கடற்றொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள் என்பதையும்;

(ii) மேற்படி கடற்றொழில் துறைமுகத்தை விரிவாக்குவதன் தேவையொன்று உள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி கடற்றொழில் துறைமுகத்தை விரிவாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-18

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

அமைச்சு

கடற்றொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks