பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-11-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0454/2020: "தியவர" மீன்பிடிக் கிராமக் காணிகள்: உறுதிகள்

454/2020

கௌரவ இஷாக் ரஹுமான்,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) அனுராதபுர மாவட்டத்தின் இப்பலோகம பிரதேச செயலகப் பிரிவின் 493 ஆம் இலக்க விஜிதபுர கிராம உத்தியோகத்தர் பிரிவில் தற்போதைய பிரதம அமைச்சர் கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தியவர மீன்பிடி கிராமத்தின் தற்போதைய நிலைமையினை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேற்படி கிராமத்தின் காணிகளுக்கு உறுதிகளை வழங்குவதற்கு அடிப்படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி நடவடிக்கை யாதென்பதையும்;

(iii) மேற்படி காணிகளுக்கு உறுதிகள் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-18

கேட்டவர்

கௌரவ இஷாக் ரஹுமான், பா.உ.

அமைச்சு

காணி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-07

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks