பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
421/2020
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இன்றளவில் அநேகமான வேலைகள் பூரத்தி செய்யப்பட்டு வருகின்ற "விசல் மாத்தளை" நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் குடிமனைகளுக்கான நீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ள உக்குவெல, இரத்தோட்டை, மாத்தளை, யட்டவத்த மற்றும் பல்லேபொல பிரதேச செயலகப் பிரிவுகளில் அமைந்துள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை என்னவென்பதையும்;
(ii) அந்தக் கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் குடிமனைகளுக்கான நீர் இணைப்புகள் வழங்கப்படுவதில் உள்ளடக்கப்படாத பல கிராம அலுவலர் பிரிவுகள் மேற்படி பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படுவதை அவர் அறிவாரா என்பதையும்;
(ii) அந்தக் கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளில் குடிமனைகளுக்கான நீர் இணைப்புகள் வழங்கப்படாத கிராமங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iv) அக்கிராமங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(v) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் அக்கிராமங்களுக்கும் குடிமனைகளுக்கான நீர் இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
(vi) இன்றேல், அதற்கென மாற்றத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;
(vii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-05
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
நீர் வழங்கல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks