பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2020-11-03   பதிலளிக்கப்பட்டவைகள் 

0420/2020: "Wisal Dambulla" - water project

420/2020 கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) இன்றளவில் அநேகமாக வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்ற “விசல் தம்புள்ள” நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் குடிமனைகளுக்கான நீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ள கலேவெல மற்றும் தம்புள்ளை பிரதேச செயலகப் பிரவுகளில் அமைந்துள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்; (ii) மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள் யாவை என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் குடிமனைகளுக்கான நீர் இணைப்புகள் வழங்கப்படுவதில் உள்ளடக்கப்படாத பல கிராம அலுவலர் பிரிவுகள் கலேவெல மற்றும் தம்புள்ள பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படுவதை அவர் அறிவாரா என்பதையும்; (ii) அந்தக் கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள் யாவை என்பதையும்; (iii) மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளில் குடிமனைகளுக்கான நீர் இணைப்புகள் வழங்கப்படாத கிராமங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்; (iv) அக்கிராமங்களின் பெயர்கள் யாவை என்பதையும்; (v) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் அக்கிராமங்களுக்கும் குடிமனைகளுக்கான நீர் இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்; (vi) இன்றேல், அதற்கென மாற்றுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்; (vii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்; அவர் மேலும் இச்சபையில் அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-03

கேட்டவர்

கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-25

பதில் அளித்தார்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks