04

E   |   සි   |  

 திகதி: 2020-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0344/2020: தேயிலைச் சக்தி நிதியம்: விபரம்

344/2020

கௌரவ மயந்த திசாநாயக்க,— பெருந்தோட்ட அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தேயிலை சக்தி நிதியத்தில் ஆரம்பம் தொடக்கம் இதுவரையில் உள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(ii) இந்நிதியத்தின் மூலமாக சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் நன்மைகள் யாவை என்பதையும்;

(iii) தேயிலை சக்தி நிதியத்தின் ஆரம்பம் தொடக்கம் இதுவரை அங்கத்துவம் பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) இந்நிதியத்திற்கு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ள நிதித்தொகை எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) ​தேயிலை சக்தி நிதியத்தின் மூலமாக தேயிலைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்; ‍

(ii) ஆமெனில், அத்தொழிற்சாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) அத்தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;

(iv) அதற்கென செலவிடப்படுள்ள மொத்தப் பணத்தொகை எவ்வளவென்பதையும்?

(v) தொழிற்சாலைகளு​க்கென முதலீடு செய்யப்பட்ட பணத்தொகையினால் ஏதேனும் இலாபம் கிடைக்கின்றதா என்பதையும்;

(vi) ஆமெனில், மேற்படி இலாபம் எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-25

கேட்டவர்

கௌரவ மயந்த திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-20

பதில் அளித்தார்

கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks