04

E   |   සි   |  

 திகதி: 2020-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0342/2020: Examination progress of Audit officer grade II in 2018

342/2020

கெளரவ சந்திம வீரக்கொடி,— பிரதம அமைச்சரும், நிதி அமைச்சரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் நகர அபிவிருத்திமற்றும் வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2018/05/11 ஆம் திகதிய அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைய கணக்காய்வு பரிசோதகர் சேவையின் II ஆம் தரத்திற்கு கணக்காய்வுப் பரிசோதகர் ஆட்சோ்ப்பு – 2018 இற்கான திறந்த போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டது என்பதையும்;

(ii) மேற்படி போட்டிப் பரீட்சை 2018 அக்டோபர் மாதம் 14, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் சில பரீட்சை நிலையங்களில் நடைபெற்றன என்பதையும்;

(iii) மேற்படி போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதையும்;

(iv) மேற்படி போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு இதுவரை 2 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் கடந்துள்ளது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி பரீட்சையின் பெறுபேறுகளை துரிதமாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

(ii) அவ்வாறு பெறுபேறுகளை வெளியிட்ட பின்னர் தகைமை பெற்றுள்ள அபேட்சகர்களுக்கு உரிய நியமனங்கள் துரிதமாக வழங்கப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-23

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-25

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks