01

E   |   සි   |  

 திகதி: 2020-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0303/2020: திறந்த பல்கலைக்கழகச் செயற்பாடுகள்: நிதி

303/2020

கௌரவ (கலாநிதி) (திருமதி) ஹரினி அமரசூரிய,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழக மற்றும் தொலைக் கல்வி மேம்பாட்டிற்கான ஒரு இராஜாங்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ள பின்னணியில் —

(i) இலங்கையில் பல்வகை திறந்த பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளதா என்பதையும்;

(ii) உயர் கல்வியினை பெறுவதற்கு எதிர்பார்க்கும் எவ் வகுதியினரை இலக்குவைத்து தொலைக்கல்வி வசதிகளை விரிவாக்குவதற்கு அரசு நோக்கம் கொண்டுள்ளதென்பதையும்;

(iii) தொலைக் கல்வி வாய்ப்புகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கு எதிர்காலத்திலும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அதன் நிதியத்தின் கீழ் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் தொடர்ந்தும் செயற்படுகின்றதா என்பதையும்;

(ii) இல்லையெனில், அது எந்த அதிகார முறைமைக்கு உட்படுத்தப்படுமென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் பணிகளுக்ககாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவென்பதையும்;

(ii) பல்கலைக்கழகத்திற்காக உறப்படும் செலவினத்தில் அரசின் பங்களிப்பு எவ்வளவு என்பதையும்;

மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-25

கேட்டவர்

கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-12-01

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks