பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0905/ ’10
கெளரவ எம்.ரீ. ஹசன் அலி,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக கிழக்கு மாகாணத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொடர்ந்து கடைமையாற்றிய ஆங்கில ஆசிரியர்களுக்கு இரு கட்டங்களில் (அ.நி.சுற்றறிக்கை இல. 13 /2005 மற்றும் 21 / 2006 இன் கீழ் ) நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளனவென்பதையும் ,
(ii) மேற்படி அ.நி. சுற்றறிக்கையின் படி கல்வி அமைச்சசின் செயலாளரது ED / 2 / 29 / 4 / 1 / 46 ஆம் இலக்க 2005 / 7 /19 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளின் படி, 2005/7/28 ஆம் திகதி முதல் மேற்படி ஆசிரியர்களில் ஒரு சிலருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும், 2003 – 2004 ஆண்டுகளிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் தொடர்ந்து கடைமையாற்றுகின்ற சுமார் 50 ஆசிரியர்களுக்கு இது வரை நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவில்லை என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) அம்பாறை மாவட்டத்தின் அம்பாறை, அக்கறைப்பற்று மற்றும் சம்மாந்துறை கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளில் கடைமையாற்றுகின்ற அத்தகைய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கும்,
(ii) மட்டக்களப்பு மாவட்டத்தி்ன் பட்டிரிப்பு, கல்குடா மற்றும் மட்டக்களப்பு கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளில் கடைமையாற்றுகின்ற அத்தகைய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கும்
துரிதமாக நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா ?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-03-23
கேட்டவர்
கௌரவ கௌரவ எம்.ரி. ஹஸன் அலி, பா.உ.,, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks