01

E   |   සි   |  

 திகதி: 2020-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0249/2020: Details of Uda Gammana housing scheme in Kelabokka estate Panvila Divisional Secretariat

249/2020

கௌரவ வேலு குமார்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) கண்டி மாவட்டத்தின் பன்வில பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள, அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான கெலாபொக்க தோட்டத்தில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் "உதா கம்மான வீட்டு திட்டம்" ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?

(ஆ) மேற்குறிப்பிட்ட வேலைத்திட்டத்தின் கீழ் மேற்படி தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள —

(i) உதா கம்மான வீட்டுத்திட்டங்களின் எண்ணிக்கை;

(ii) உதா கம்மான வீட்டுத்திட்டம் ஒவ்வொன்றிலும் உள்ளடக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை;

வெவ்வேறாக யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) வீடொன்றை நிர்மாணிப்பதற்காக ஒவ்வொரு பயனாளிக்கும் —

(i) வழங்குவதாக இணங்கிய மொத்த நிதித்தொகை;

(ii) வழங்கப்படும் மொத்த தொகையில், கடன் தொகை;

(iii) வழங்கப்படும் மொத்த தொகையில், உதவித் தொகை;

(iv) இதுவரையில் செலுத்தப்பட்டுள்ளதொகை;

வெவ்வேறாக எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) ஒவ்வொரு பயனாளிக்குமான எஞ்சிய நிதித்தொகையை வழங்கி, இக்கருத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-24

கேட்டவர்

கௌரவ வேலு குமார், பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-09-24

பதில் அளித்தார்

கௌரவ இந்திக அனுருத்த ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks