01

E   |   සි   |  

 திகதி: 2021-02-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

0231/2021: 2015-2019 வரை மிருகக் கொழுப்பு / மரக்கறி எண்ணெய் இறக்குமதி: விபரம்

231/2020

கௌரவ மொஹமட் முஸம்மில்,— வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஒவ்வொரு வருடத்திலும் —

(i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மிருகக் கொழுப்பு / மரக்கறி எண்ணெய்யின் அளவு யாதென்பதையும்;

(ii) அதற்காக செலவிடப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி மிருகக் கொழுப்பு / மரக்கறி எண்ணெய் எந்தெந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன என்பதையும்;

(iv) மேற்படி மிருகக் கொழுப்பு மற்றும் மரக்கறி எண்ணெய் இறக்குமதி செய்த கம்பெனிகள் யாவையென்பதையும்;

தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) மேற்படி காலப்பகுதியில் இலங்கைக்கு மிருகக் கொழுப்பு மற்றும் மரக்கறி எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காகச் செலவாகிய மொத்தத் தொகை எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-09

கேட்டவர்

கௌரவ மொஹமட் முஸம்மில், பா.உ.

அமைச்சு

வர்த்தகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2021-02-09

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks