04

E   |   සි   |  

 திகதி: 2020-10-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0184/2020: எழுவைதீவில் (சா.த.) பரீட்சையை நடாத்தாமை: காரணம்

184/2020

கௌரவ சிவஞானம் சிறீதரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) யாழ்ப்பாண மாவட்டத்தில் தீவுக் கூட்டத்தில் எழுவைதீவு எனும் தீவொன்று இருப்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி தீவில் காணப்படும் அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கை யாது;

(ii) எழுவைதீவிற்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான கடல் மார்க்க தூரம் எத்தனை கிலோமீற்றர்கள்;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) எழுவைதீவு எனும் பழைய தீவில் சரவணபவா கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர (சா.த.) பரீட்சைக்கு இறுதியாக மாணவர்கள் தோற்றிய வருடம் யாது;

(ii) மேற்குறிப்பிட்ட பாடசாலை மாணவர்கள் தற்போது மேற்குறிப்பிட்ட பரீட்சைக்கு தோற்றும் நிலையம் யாது;

(iii) கல்விப் பொதுத் தராதர (சா.த.) பரீட்சையை எழுவைதீவில் நடாத்துவதில் உள்ள தடை யாது;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-06

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-06

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks