01

E   |   සි   |  

 திகதி: 2021-02-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0173/2021: கல்கிசை கடற்கரை மணல் நிரப்பல் கருத்திட்டம்: நட்டம்

173/2020

கெளரவ எஸ்.எம். மரிக்கார்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) கல்கிசை கடற்கரை மண்ணரிப்பை தடுப்பதற்கு 890 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட மணல் நிரப்பல் கருத்திட்டம் தோல்வி அடைந்துள்ளதனை அவர் அறிவாரா?

(ஆ) (i) அரச அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி கருத்திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட செயன்முறையில் காணப்பட்ட சிக்கல்கள் காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பில் தற்போதைய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டம் தோல்வியடைந்தமையால் கல்கிஸ்ஸை கடற்கரை மற்றும் கடல்சார் சூழல் கட்டமைப்பில் யாதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பின் அதனை மீள இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பில் தங்களது அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-02-23

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-02-23

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks