E   |   සි   |  

 திகதி: 2020-10-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0165/2020: Cultural center for Kolonnawa electoral district

165/2020

கௌரவ எஸ். எம். மரிக்கார்,— பிரதம அமைச்சர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பல்லின மற்றும் பல மதங்களை பின்பற்றுகின்ற மக்கள் வாழ்கின்ற கொலொன்னாவ பிரதேசத்தில் இளைஞர் சமுதாயத்தையும் பாடசாலைக் கல்வி கற்கின்ற மாணவர்களையும் கலாசார, சமய மற்றும் நற்பண்புகள் நிறைந்த தலைமுறையினராக மாற்றும் நோக்கத்துடன் கொலொன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் கலாசார நிலையமொன்றை நிர்மாணிக்க வேண்டியது இன்றியமையாததும் பொருத்தமானதுமானதொரு விடயம் என்பதையும்;

(ii) மேற்படி கலாசார நிலையத்தை நிர்மாணிப்பதற்கு கடந்த காலத்தில் அப்போதைய உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருந்தது என்பதையும்;

(iii) அதற்குரிய நிதியம் ஒதுக்கப்பட்டிருந்ததென்பதையும்;

(iv) இருந்தபோதிலும் மேற்படி கருத்திட்டம் அதற்கு மேல் செயற்படுத்தப்படவில்லை;

என்பதையும் அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி கலாசார நிலையத்தை நிர்மாணித்தல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-08

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-10-08

பதில் அளித்தார்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks