04

E   |   සි   |  

 திகதி: 2020-10-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0153/2020: கொழும்பு, ஆவே மரியாள் வித்தியாலயம்: பிரச்சினையைத் தீர்த்தல்

153/2020

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கொழும்பு 15, ஆவே மரியாள் வித்தியாலயத்தில் கத்தோலிக்க திருமறை மற்றும் கீழைத்தேய சங்கீதம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்கும் ஆரம்பநிலை பிரிவிலும் தலா ஒவ்வொரு ஆசிரியர் வெற்றிடம் நிலவுகின்றதென்பதையும்;

(ii) மழை நீர் வடிந்தோடுவதற்கான முறையான வடிகாலமைப்பொன்று இல்லாமை காரணமாக இவ்வித்தியாலயத்தின் சிறிய மைதானமானது மழை நீரால் முழ்குவதனால் மாணவர்களின் விளையாட்டுச் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைச்சினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-23

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2020-11-27

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks