பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
126/2020
கெளரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதான குளங்களில் ஒன்றான நஞ்சுண்டான் குளத்தை புனரமைப்புச் செய்வதற்கான கடந்த அரசாங்கத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்காக 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் தொடர்ச்சியாக பெய்துவந்த மழையின் காரணமாக குறிப்பிட்ட புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் ஒதுக்கமானது திருப்பியனுப்பப் பட்டுள்ளது என்பதையும்;
(ii) இக்குளத்தின் நீரைப் பெறுகின்ற பெருமளவிலான வயல்களும் மேட்டு நிலங்களும் காணப்படுவதோடு கிராமிய மக்கள் தமது வாழ்வாதாரத்தின் பொருட்டு இக்குளத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையும்;
(iii) நஞ்சுண்டான் குளக்கட்டிலுள்ள அநாவசியமான மரங்களை வெட்டி அகற்றுவதற்கு மரக் கூட்டுத்தாபனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் போக்குவரத்துக்கான வீதி சேதமடைந்துள்ளதனால் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) ஆமெனில், மேற்படி நஞ்சுண்டான் குளத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படும் திகதி யாதென்பதையும்;
(ii) போக்குவரத்துக்கான வீதி புனரமைக்கப்பட்டு, மேற்படி குளத்தின் புனரமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-24
கேட்டவர்
கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.
அமைச்சு
நிதி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-11-18
பதில் அளித்தார்
கௌரவ அஜித் நிவாட் கப்ரால், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks