பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
123/2020
கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பிங்கிரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயத்திற்கென இலங்கை முதலீட்டுச் சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் அளவு எவ்வளவு என்பதையும்;
(ii) அக்காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிறுவனங்கள் யாவை என்பதையும்;
(iii) அக்காணிகள் கையகப்படுத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;
(iv) அக்காணிகளுக்காகச் செலுத்தப்பட்ட பெறுமதி எவ்வளவு என்பதையும்;
(v) அக்காணிகளின் பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்ட முறை யாதென்பதையும்;
(vi) தற்போது அக்காணிகளில் காணப்படுகின்ற தென்னை மரங்களின் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதும் அவற்றுக்கான விளைச்சல்களைப் பெறுகின்றதுமான நிறுவனம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-25
கேட்டவர்
கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-11-26
பதில் அளித்தார்
கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks