04

E   |   සි   |  

 திகதி: 2020-09-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0117/2020: கிரிக்கட் விளையாட்டை மேம்படுத்தல்: இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பங்களிப்பு

117/2020

கௌரவ துஷாரா இந்துனில் அமரசேன,— இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2015 ஆண்டு தொடக்கம் இற்றைவரை இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் கடமையாற்றிய/கடமையாற்றுகின்ற ஒவ்வொரு உத்தியோகத்தரினதும் முகவரி, மாதாந்தம் செலுத்தப்படும் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற சலுகைகள் தனித்தனியே யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இக்காலத்தில் இவர்கள் பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் பிற சலுகைகளுடன் ஒப்பிடும் போது, இலங்கையின் கிரிக்கட் விளையாட்டை மேம்படுத்த அவர்களது நிர்வாக காலத்தில் தவறிவிட்டனர் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) இலங்கையில் கிரிக்கட் விளையாட்டை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-25

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

இளைஞர் மற்றும் விளையாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-01-06

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks