logo

03

E   |   සි   |  

 திகதி: 2020-11-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0109/2020: புகையிரதப் பெட்டிகள், புகையிரத எஞ்சின்கள் மற்றும் இயக்குவலுத் தொகுதிகள்: விபரம்

109/2020

கௌரவ புத்திக பத்திறண,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2015.01.01 ஆம் திகதி தொடக்கம் 2019.12.31 ஆம் திகதி வரை இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதப் பெட்டிகள், புகையிரத எஞ்சின்கள் மற்றும் இயக்கு வலுத் தொகுதிகளின் எண்ணிக்கை;

(ii) அதற்காக செலவிடப்பட்ட தொகை;

வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதப் பெட்டிகள், புகையிரத எஞ்சின்கள் மற்றும் இயக்கு வலுத் தொகுதிகளில் சில இலங்கையில் ஓட்டத்தில் ஈடுபடுத்த பொருத்தமற்றவை என்பதை அவர்அறிவாரா?

(இ) (i) ஆமெனின், புகையிரதப் பெட்டிகள், புகையிரத எஞ்சின்கள் மற்றும் இயக்கு வலுத் தொகுதிகள் என்பவற்றை இந்நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கான செயற்பாடு சார்பாக நியமிக்கப்பட்ட கேள்விப்பத்திர மற்றும் தொழில்நுட்பக் குழுக்களின் அங்கத்தவர்களின் பெயர்கள் மற்றும் பதவிகள்;

(ii) அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்;

வெவ்வேறாக யாவையென்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) (i) இலங்கையில் புகையிரதப் பெட்டிகள் தயாரிப்பு ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

(ii) அதன் பிரகாரம், அரசாங்கத்தினால் சேமித்துக்கொள்ளக்கூடிய தொகை எவ்வளவு;

என்பதையும் மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-20

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2021-01-06

பதில் அளித்தார்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks