பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
99/2020
கௌரவ புத்திக பத்திறண,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் வில்பத்து தேசிய வனப்பூங்காவை முதன்மையாகக் கொண்ட வனப்போர்வை மனித செயற்பாடுகள் காரணமாக அழிவடைகிறது என்பதையும்;
(ii) வடமத்திய மாகாணம் ஏற்கனவே பகுதியளவில் பாலைவனமாக மாறியுள்ளது என்பதையும்;
(iii) இந்த நிலைமையானது இலங்கையின் ஒட்டுமொத்த காலநிலையினையும் பாதித்துள்ளது என்பதையும்;
(iv) ஆகையால், இலங்கையில் தொடர்ச்சியாக யாதேனும் ஒரு பிரதேசம் வௌ்ளம், வறட்சி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்றது என்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) இலங்கையில் சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான தேசியக் கொள்கைகளைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்;
(ii) ஆமெனில், அத்திகதி யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இலங்கையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பாக புத்திஜீவிகள் குழுவொன்றின் வாயிலாக ஆய்வொன்றினை மேற்கொள்வது உகந்ததென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஈ) ஆமெனில், மேற்படி ஆய்வினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-09-25
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-11-19
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks