02

E   |   සි   |  

 திகதி: 2011-02-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0888/2011: Gageyaya Land in Matale wilgamuwa

0888/ ’10

கெளரவ வசந்த அலுவிஹாரே,— காணி, காணி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,--

(அ)    (i)      மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ பேரகனத்த கிராம அலுவலர் பிரிவிலுள்ள கங்கே யாய காணியின் 42 காணித்துண்டுகள் 2002 ஆம் ஆண்டு காணிக் கச்சேரி நடாத்தப்பட்டு காணியற்ற விவசாயிகளுக்கு பகிர்ந்து  அளிக்கப்பட்டுள்ளதென்பதையும்,

(ii) பிற்காலத்தில் இக்காணி பெற்றவர்களை விரட்டிவிட்டு வேறு நபர்கள் இக்காணித்துண்டுகளை பலாத்காரமாகக் கைப்பற்றியுள்ளனர் என்பதையும்,

(iii) இவ்வாறு விரட்டப்பட்ட காணி பெற்றவர்கள் இது தொடர்பாக முறைப்பாடு செய்தபோதிலும் இதுவரை இது பற்றிய விசாரணையேதும் நடாத்தப்பட வில்லையென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) 2002 ஆம் ஆண்டு காணி பகிர்ந்தளிக்கப்பட்டதற்கமைய காணி பெற்றவர்களின் பெயர்ப்பட்டியலை அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?

(இ) தமது காணிகளிலிருந்து விரட்டப்பட்ட காணி பெற்றுக்கொண்டவர்களினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரித்து இவர்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி மீண்டும் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், என்?

கேட்கப்பட்ட திகதி

2011-02-23

கேட்டவர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

அமைச்சு

காணி, காணி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks