E   |   සි   |  

 திகதி: 2011-02-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

0887/2011: Inamaluwa Reserved Forest

0887/ ’10

கெளரவ வசந்த அலுவிஹாரே,—  சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    தம்புல்ல நகரத்திலும் பொருளாதார மையத்தைச் சார்ந்த பிரதேசத்திலும் அன்றாடம் சேர்கின்ற கழிவுப்பொருட்கள் இனாமலுவ வன ஒதுக்கத்தில் அப்புறப்படுத்தப்படுகின்றதென்பதை அவர் அறிவாரா?

(ஆ)    (i)      இதன் காரணமாக இனாமலுவ ஒதுக்கத்தில் பாரிய சுற்றாடல் சேதம் இடம்பெறுகின்றதென்பதையும்,

(ii) இவ்விதமாக அப்புறப்படுத்தப்படுகின்ற கழிவுப்பொருட்களுடன் உள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் துண்டுகளை உணவாக உட்கொள்வதனால் இவ்வொதுக்கத்திலுள்ள வனசீவராசிகளின் உயிர்களுக்குப் பாரிய அச்சுறுத்தல் தோன்றியுள்ளதென்பதையும்

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(இ) இனாமலுவ வன ஒதுக்கத்துக்கு ஏற்படுத்துகின்ற சுற்றாடல் சேதத்தினைத் தடுப்பதற்கும், அங்குள்ள வனசீவராசிகளின் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2011-02-25

கேட்டவர்

கௌரவ வசந்த அலுவிஹாரே, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks