பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
64/2020
கௌரவ சமிந்த விஜேசிறி,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட விரோத போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) மேற்படி சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டமைக்கு சனாதிபதி விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் அது சார்பாக வழங்கப்பட்ட பரிசுத் தொகைகள் தனித்தனியாக எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி சுற்றிவளைப்புக்களின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்களின் கைகளுக்குச் சென்றடையச் செய்தல் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(v) அவர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
(vi) மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் புலனாய்வுகளின் முன்னேற்றம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-09
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2020-10-09
பதில் அளித்தார்
கௌரவ சமல் ராஜபக்ஷ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks