04

E   |   සි   |  

 திகதி: 2021-01-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0025/2021: சேவையிலிருந்து நீக்கப்பட்ட புகையிரதப் பெட்டிகள்: விபரம்

25/2020

கௌரவ ஹேஷா விதானகே,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரையில் சேவையிலிருந்து நீக்கப்பட்ட புகையிரத பெட்டிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) இவ்வாறு நீக்கப்பட்ட புகையிரத பெட்டிகளில் திருத்தப்பட்டு மீண்டும் சேவைக்குள் இணைக்கப்பட்ட புகையிரத பெட்டிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி புகையிரத பெட்டிகளை திருத்தியமைத்த நிறுவனத்தின் பெயர் யாதென்பதையும்;

(iv) இதற்கென செலவிடப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;

(v) சேவையிலிருந்து நீக்கப்பட்ட எஞ்சிய புகையிரத பெட்டிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு அமைச்சு வசமுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-08

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2021-03-23

பதில் அளித்தார்

கௌரவ காமினி லொக்குகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks