பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
16/2020
கௌரவ ஹேஷா விதானகே,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப மட்டத்தைச் சேர்ந்த (PL வகுதி) அலுவலர்கள் 3/2016 இலக்கமுடைய பொது நிருவாக சுற்றறிக்கைக்கு அமைவாக சம்பளம் பெறுகின்றார்கள் என்பதையும்;
(ii) மேற்படி PL வகுதியின் அலுவலர்களுக்கு 3/2016 இலக்கமுடைய பொது நிருவாக சுற்றறிக்கைக்கு அமைவாக பதவியுயர்வு வழங்கப்படுவதற்கான நடைமுறையொன்று இருக்கின்றது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப மட்டத்தைச் சார்ந்த (PL வகுதியின்) அலுவலர்களின் எண்ணிக்கை மற்றும் நிறைவேற்று மட்டத்தைச் சோ்ந்த அலுவலர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இலங்கை போக்குவரத்து சபையின் அலுவலர்களுக்கு இப்பதவியுயர்வுகள் வழங்கப்படுமா என்பதையும்;
(iii) ஆமெனில், மேற்படி பதவியுயர்வு வழங்கப்படும் தரங்கள் யாவையென்பதையும்;
(iv) மேற்படி பதவியுயர்வுகள் 3/2016 இலக்கமுடைய பொது நிருவாக சுற்றறிக்கையின் பிரகாரம் வழங்கப்படுமா என்பதையும்;
(v) இல்லையெனில், பின்பற்றப்படும் நடைமுறை யாதென்பதையும்;
(vi) தற்போதுள்ள நிறைவேற்று அலுவலர்களுக்கு மேலதிகமாக 3/2016 இலக்கமுடைய பொது நிருவாக சுற்றறிக்கையின் பிரகாரம் வழங்கப்படுகின்ற பதவியுயர்வுகளின் வாயிலாக ஒவ்வொரு டிப்போவிற்கும் புதிதாக நியமிக்கப்படுகின்ற நிறைவேற்று மட்டத்திலான அலுவலர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-09
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2020-10-09
பதில் அளித்தார்
கௌரவ காமினி லொக்குகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks