பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
127/2020
கௌரவ ஆனந்த அலுத்கமகே,— கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான,
(i) கைத்தொழில் பேட்டைகளின் எண்ணிக்கை;
(ii) நில அலகுகளின் எண்ணிக்கை;
(iii) கைத்தொழில்பேட்டைகளில் இயங்கிவருகின்ற தொழிற்சாலைகளின் எண்ணிக்கை;
(iv) கைத்தொழில் பேட்டைகளில் தொழில்புரிகின்றவர்களின் எண்ணிக்கை;
என்பவற்றை தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) 2017 ஆண்டில் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையினால் மத்திய மாகாணத்திற்காக,
(i) சுயதொழில் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகள்;
(ii) மேற்படி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்ட இடங்கள்;
(iii) வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள்;
(iv) நன்மைபெறுனர்கள் தெரிவுசெய்யப்பட்ட அடிப்படை;
(v) மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப பயிற்சி நிகழ்ச்சிகள்;
யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) நிகழ்காலத்தில் இணையத்தளத்தின் ஊடாக இலத்திரனியல் வியாபார முயற்சிகளை மேற்கொள்ளும் ஆற்றல் கிராமிய பிரதேசங்களில் வசிக்கின்ற ஆட்களுக்கும் திறந்ததாக உள்ளபோதிலும் அதற்கு அவசியமான அறிவு போதுமான அளவில் வழங்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறாரா;
(ii) இந்த அறிவினை முறைசார்ந்தவகையில் வழங்க நடவடிக்கை எடுப்பாரா;
என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-02-18
கேட்டவர்
கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.
அமைச்சு
கைத்தொழில்கள், தேவைகள் விநியோகங்கள் மற்றும் விநியோக சங்கிலி முகாமைத்துவ
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks