பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
122/2020
கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர், புத்தசாசன, கலாசார மற்றும் சமய அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கையர் களுக்கு சனாதிபதி நிதியத்தின் மூலம் முழுமையான அல்லது பகுதியளவு புலமைப்பரிசில் வழங்கும் வேலைத்திட்டமொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனின், மேற்படி வேலைத்திட்டத்திற்கு அமைவாக இதற்காக தகைமை பெற்றவர்கள் தெரிவு செய்யப்படும் அடிப்படை மற்றும் முறையியல் யாதென்பதையும்;
(iii) க.பொ.த. (உயர் தரத்தில்) அதிகூடிய புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் முறையியலொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
(iv) பட்டப்பின் படிப்பு கல்விக்காக பட்டதாரிகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் முறையியலொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
(v) மேற்படி (iii) மற்றும் (iv) தவிர வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலமைப் பரிசில்களை பெற்றுக்கொடுக்கும் முறையியலொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
(vi) ஆமெனின், மேற்படி முறையியல் யாதென்பதையும்;
(vii) 2005 தொடக்கம் 2017 ஆம் ஆண்டு வரை மேற்படி (iii) மற்றும் (iv) இல் குறிப்பிடப்பட்ட முறையியல்களுக்கு புறம்பாக, உள்நாட்டு அல்லது வெளிநாட்டு புலமைப்பரிசில்களை பெற்றுக்கொண்டவர்களின் பெயர்கள், நிதித் தொகைகள், நிறுவனங்கள் மற்றும் வெளிநாடெனில், அந்நாட்டின் பெயர் ஆண்டுவாரியாக தனித்தனியே யாதென்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-02-18
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks