02

E   |   සි   |  

 திகதி: 2020-02-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0121/2020: The Allowance for Elders

121/2020

கௌரவ பிமல் ரத்நாயக்க,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 70 வயதுக்கு மேற்பட்ட பிரசைகளுக்கு செலுத்தப்படுகின்ற முதியோர் கொடுப்பனவுக்கு விண்ணப்பித்துள்ள பலருக்கு இற்றைவரை அக் கொடுப்பனவு கிடைக்கவில்லை என்பதையும்;

(ii) இது தொடர்பாக பிரதேச செயலகங்களிடம் வினவும் போது தற்போது கொடுப்பனவை பெறுகின்றவர்களில் ஏற்படுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கையின் பிரகாரம் எஞ்சியோருக்கு கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) விடயத்துக்கு பொறுப்பான தற்போதைய அமைச்சர், அமைச்சுப் பதவியை ஏற்ற பின்னர் முதியோர் கொடுப்பனவு வழங்கப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள நிலையில் இதுவரை அக்கொடுப்பனவு கிடைக்காத முதியோர்களுக்கு அக்கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iii) ஆமெனில், அது எத்திகதியிலிருந்து என்பதையும்;

அவர் இந்த கௌரவ சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-02-18

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

மகளீர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks